என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கவர்னர் கிரண்பேடி"
புதுவை கவர்னராக கிரண்பேடி 2016 மே 29-ந்தேதி பதவியேற்றார்.
கிரண்பேடி பதவியேற்ற பிறகு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. பதவியேற்றது முதல் கவர்னர் கிரண்பேடிக்கும், புதுவை அமைச்சரவைக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வந்தது.
கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் ஆட்சியாளர்களை விமர்சித்து வந்தார். இதற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னருக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக கவர்னர் தனது செயல்பாடுகளை குறைத்து அமைதியாக இருந்து வந்தார். தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் நேற்றோடு முடிவுக்கு வந்தது. அகில இந்திய அளவில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று வரும் 30-ந் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க கவர்னர் கிரண்பேடிக்கு அழைப்பு வந்துள்ளது. விழாவில் பங்கேற்க கவர்னர் கிரண்பேடி இன்று காலை புதுவையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி புறப்பட்டு செல்லும் முன்பாக புதுவை மக்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில், புதுவையின் வளர்ச்சிக்கு மேற்கொண்ட பணிகள், எடுத்த முயற்சிகள் குறித்து எழுதியுள்ளார். இதில் தனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இதனால் புதுவையில் இருந்து கவர்னர் கிரண்பேடி விடைபெறுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கவர்னர் கிரண்பேடி மாநில கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கம் அல்லது கேரளாவில் கிரண்பேடி கவர்னராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
டெல்லி புறப்பட்டு செல்லும் முன்னர் கவர்னர் மாளிகையில் உள்ள தனது பொருட்களை பார்சல் செய்து வைக்கும்படி ஊழியர்களிடம் கிரண்பேடி கூறி இருக்கிறார். எனவே, அவர் மாற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
கிரண்பேடிக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் புருஷோத்தமன் புதுவை கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கவர்னர் கிரண்பேடி புதுவை அரசின் அன்றாட பணிகளில் தலையிடுவதை எதிர்த்து ஐகோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் தீர்ப்பளித்த ஐகோர்ட்டு, கவர்னர் அன்றாட பணிகளில் தலையிடக்கூடாது, அரசு அலுவல் பணிகள் தொடர்பான தகவல்களை சமூக வலைதளம் மூலமாக பகிரக் கூடாது என்று கூறியது.
ஆனால், இந்த உத்தரவை கவர்னர் மீறுவதாக கூறி புதுவை பெரியகடை போலீசில் புதுவை மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு கடந்த 30.4.2019 அன்று வழங்கிய தீர்ப்பில் கவர்னர் மற்ற அதிகாரிகள், பொது மக்களின் குறைகேட்டல் என்ற பெயரில் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது, அரசு அதிகாரிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட பொது ஊடகங்களையே பயன்படுத்த வேண்டும்.
தனியார் வலைதளங்களின் கணினி சேவை மையங்கள் வெளிநாடுகளில் உள்ளதால் அரசு ரீதியாக சொல்லப்படுகின்ற கருத்துக்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடும் என்ற அச்சம் உள்ளது.
ஆனால், கவர்னர் கிரண்பேடி தனது வலைதளத்தில் தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதிகாரிகளிடம் வாட்ஸ்-அப் மூலம் பேசி வருகிறார்.
இது, நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதிக்கும் செயலாகும். எனவே, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் இந்திய தேசிய இளைஞர் முன்னணி சார்பிலும் கவர்னர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போலீசார் இந்த புகார் மனுக்களை பெற்றுக்கொண்டனர். ஆனால், வழக்கு பதிவு செய்யவில்லை.
மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் அதிகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதிகமாக தலையீடு செய்வதாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் புதுவையை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை நீதிபதி மகாதேவன், ’முதலமைச்சரின் அதிகாரத்திலும் அன்றாட அலுவல்களில் தலையிடவும், கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
மேலும், யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார். #MadrasHCMaduraibench #KiranBedi
புதுவையில் இன்று காலை 7.15 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ் நிவாசில் இருந்து வாக்களிப்பதற்காக புதுவை சுகாதாரத்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.
அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அவருடன் கவர்னர் மாளிகை ஊழியர்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இதனை வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வாக்களித்த பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வாக்களிப்பது நமது கடைமை. இந்திய ஜனநாயகம் மிகவும் வலிமையானது. தேர்தல் ஆணையம் பலகோடி ரூபாய் செலவு செய்து தேர்தலை நடத்துகிறது. இதனை நாம் வீணாக்க கூடாது.
பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களித்ததோடு நின்றுவிடாமல், ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #Kiranbedi
புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடந்த 27-ந் தேதி புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது நாஞ்சில் சம்பத் புதுவை கவர்னர் கிரண்பேடி குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து புதுவை மாநில பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தேர்தல் ஆணையாளர் கந்தவேலு, போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆகியோரிடம் புகார் செய்தனர்.
புகாரில் கவர்னரின் பாலினம் குறித்தும், அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி நாஞ்சில் சம்பத் பேசியதாக கூறி இருந்தார். மேலும் நாஞ்சில் சம்பத் பேசியதற்கான ஆதாரத்தை சி.டி.யாகவும் அளித்திருந்தார்.
இந்த நிலையில் புதுவை அரசின் உள்துறை கூடுதல் செயலாளரும், கவர்னரின் சார்பு செயலாளருமான சுந்தரேசன் கவர்னர் கிரண்பேடி குறித்து அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் டி.ஜி.பி. சுந்தரிநந்தாவிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் டி.ஜி.பி. சுந்தரி நந்தா தவளக்குப்பம் போலீசாருக்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மீது 294 (ஆபாசமாக திட்டுதல்), 354 ஏ (பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்துதல்), 509 (புகழுக்கு களங்கம் ஏற்படுத்துதல் )ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #NanjilSampath #kirenbedi
புதுச்சேரி:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதா வது:-
தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த அசோக் ஆனந்த் தொடர்பான வழக்கில் கோர்ட்டு தண்டனை வழங்கியதை அடுத்து அவரது பதவி தானாக பறிபோனது.
அவர் பதவி இழந்ததாக சபாநாயகர் விதிமுறைகள் படி அறிவிப்பு வெளியிட்டார். இப்போது அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அசோக் ஆனந்த் தனது பதவி பறிப்பு சம்பந்தமாக கவர்னரிடம் கொடுத்த மனுவை கவர்னர் ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி உள்ளார்.
அதில் யூனியன் பிரதேச சட்ட விதியின்படி சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி இழப்பு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஜனாதிபதி இதனை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது, புதுவை பிரதேச விதிகளுக்கு எதிரானது.
புதுவை அலுவல் விதிகள்படி எம்.எல்.ஏ. தகுதி இழப்பு தொடர்பாக கேள்வி எழுமானால் அமைச்சரவையின் முடிவு படிதான் செயல்பட வேண்டும். ஆனால், முதல்-அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் தெரியாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் 15.3.2019 அன்று ஜனாதிபதிக்கும், மத்திய உள்துறை செயலாளருக்கும் அனுப்பி உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டது தேர்தல் விதிமுறைகளுக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும் மாறானதாகும்.எனவே, இந்திய தேர்தல் ஆணையமும், புதுவை தேர்தல் துறையும் விசாரித்து பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கவர்னர் கிரண்பேடி பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர். காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். எனவே அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அல்லது தேர்தல் முடியும் வரை அவரை விடுமுறையில் செல்ல உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியுள்ளோம். இதுதொடர்பாக ஜனாதி பதிக்கும் புகார் மனு அனுப்ப உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடி நாள்தோறும் டுவிட்டர் வலைதளத்தில் சமூக கருத்துகளை பதிவிடுவது வாடிக்கை. இதேபோல கவர்னர் கிரண்பேடி டுவிட்டர் பக்கத்தில், ஜனநாயக கடமையில் ஓட்டளிப்பது முக்கியமான ஒன்று. இது நாட்டின் குடிமகன்கள் அனைவரின் கடமை. ஒவ்வொரு இந்தியனும் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் இந்த கடமையை செய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை பிரதமர் மோடிக்கும் ஹேஷ்டாக் செய்திருந்தார். கிரண்பேடியின் பதிவை குறிப்பிட்டு பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில், மக்களின் குரலை வெளிப்படுத்துவதுதான் ஓட்டு. வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வை முக்கிய பிரமுகர்கள் விரிவுபடுத்த வேண்டும். உங்கள் குரலை ஓங்கி ஒலியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமியும் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், கிரண்பேடி பிரதமர் யார்? பா.ஜனதா பிரதமர் யார்? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். டுவிட்டர் பதிவுகளை வெளியிடும்போது கவனம் வேண்டும். ஒரு அரசு பதவியில் இருந்துகொண்டு அரசியல் செய்யக்கூடாது. உங்களின் தலைவர் பிரதமர். பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் அல்ல. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது ஆகாதா? என குறிப்பிட்டுள்ளார். #Narayanasamy #kiranbedi
புதுச்சேரி:
புதுவை அரசின் மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாத ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லித்தோப்பு தொகுதியில் புதிதாக 295 பேருக்கு முதியோர், விதவை உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்கான பயனாளிகளுக்கு ஓய்வூதிய அட்டை மற்றும் முதல் மாத உதவித்தொகை வழங்கும் விழா கீர்த்தி மகாலில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். முதல்அமைச்சர் நாராயணசாமி பயனாளிகளுக்கு உதவித் தொகையை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
நான் 29 தொகுதியை ஒரு கண்ணாகவும், நெல்லித் தோப்பு தொகுதியை ஒரு கண்ணாகவும் பாவிப்பேன் என கூறியிருந்தேன். அதன்படி ஒரு கண்ணாக நெல்லித்தோப்பை பார்க்கிறேன். திட்டங்கள் அனைத்தையும் போராடி பெற வேண்டிய நிலையில் அரசு உள்ளது.
முதியோர் பென்ஷனையே 2 ஆண்டுக்கு பிறகு புதிதாக தற்போதுதான் வழங்குகிறோம். அதையும் நெல்லித்தோப்பு தொகுதியில்தான் தொடங்கி உள்ளோம். இலவச அரிசி, சென்டாக் கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி என பல திட்டங்கள் வழங்க வேண்டிய நிலை உள்ளது.
கவர்னருக்கு எதிராக இரவு- பகலாக பனியில் போராடியதன் விளைவாகத்தான் இதற்கு அனுமதி கிடைத்தது. இன்னும் 2 மாதம் பொறுத்திருங்கள்.
இந்த நிலைமை மாறும். போராட்டத்திற்கு பிரதிபலனாக எங்களோடு மக்கள் கைகொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் டெல்லி பிரதிநிதி ஜான்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் பழனி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #narayanasamy #congress #kiranbedi
புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் உள்ளது.
கட்டாய ஹெல்மெட் சட்டம் புதுவையில் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் அணியாததால் ஆண்டுதோறும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தினார். இதையடுத்து கடந்த 11-ந்தேதி முதல் புதுவையில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டது.
ஹெல்மெட் அணியாத வர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வழக்கு பதிவில் காட்டும் ஆர்வத்தை ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் காட்ட வேண்டும். அதன்பிறகு ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்தலாம் என கூறினார்.
இருப்பினும் காவல்துறை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் வாகன எண்களை குறித்துக்கொண்டனர். இவர்கள் மீது வழக்குபதிவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கவர்னருக்கு எதிராக கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதில் தளர்வு ஏற்பட்டது. தற்போது கவர்னர் மீண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை புதுவையில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என வாட்ஸ்அப்பதிவில் வலியுறுத்தியுள்ளார். மேலும் சுப்ரீம்கோர்ட் சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு மூலம் புதுவை தலைமை செயலாளர் அஸ்வனி குமாருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், இருசக்கர ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்டாய ஹெல்மெட் சட்டம் தொடர்பாக கேட்கப்பட்ட அறிக்கையை இதுவரை ஏன் அனுப்பவில்லை? என விளக்கமும் கேட்டுள்ளது. இதனால் புதுவையில் மீண்டும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. #Kiranbedi
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.
6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது. ஆனால் புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கவர்னர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது. போராட்டமும் தீவிரமடைந்து நிலைமை மோசமடைந்தது. எனவே, கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார். நேற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் நிபந்தனைகளை கவர்னர் ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தர்ணா போராட்டம் 6-வது நாளாக தொடரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மாளிகைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 39 கோரிக்கைகளில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுநருடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் தெரிவித்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புக்கொண்டார் என தெரிவித்தார். மேலும் ஓய்வூதியம், இலவச அரிசி, காவல்துறையில் பணியாளர் நியமனம் ஆகிய கோரிக்கைகளை ஆளுநர் அவர்கள் ஏற்றுக் கொண்டதாக புதுவை முதல்அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் அதிகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை பொருத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதன் மூலம் 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மாநில உரிமைக்காக நடைபெற்ற 2வது மிகப்பெரிய போராட்டம் இது என கூறினார். போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.#PuducherryCMDharna #KiranBedi #Narayanasamy #GovernorKiranbedi
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். தற்போது போராட்டம் மேலும் விரிவடைந்து நிலைமை மோசமாகி வரும் நிலையில், கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார்.
கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள தரை விரிப்பில் பூனை ஒன்று உருண்டு புரள்கிறது. இதேபோல் மரக்கிளையில் இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கின்றன. இந்த படங்களுடன் தனது கருத்தை கிரண் பேடி பதிவு செய்துள்ளார். அதில், ‘யோகா அனைவருக்கும் பொதுவானது. தர்ணா செய்வதும் யோகாதான். ஆனால், எந்த நோக்கத்திற்காக தர்ணா செய்கிறோம் என்பதைப் பொருத்து, அது என்ன ஆசனம் என்பதை கூற முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Narayanasamy #GovernorKiranbedi
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.
முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தர்ணா போராட்டம் 6-வது நாளாக தொடரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மாளிகைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார். #PuducherryCMDharna #KiranBedi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்